thumbnail

டிரிபிள் பாட்டம் -Triple Bottom

டிரிபிள் பாட்டம் -Triple Bottom

இந்த டிரிபிள் பாட்டம் அமைப்பு, காளைச் சந்தைக்கான (Bullish Reverse) (புல்லிஷ் ரிவர்ஸல் அமைப்பு) அறிகுறி எனலாம். 

இந்த அமைப்பு டிரிபிள் டாப் போல் செயல்பட்டாலும், விலை இறங்குமுகமாக இருக்கும் போது, அதற்கு மாறாக ஏறத் தொடங்கும். 
பங்கு ஒன்று அதன் ஒரே போன்ற ஆதரவு நிலையை மூன்றாவது தடவை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி செல்வது மூலம் இந்த அமைப்பு உருவாகும். 
ஒவ்வொரு முறையும் பங்கானது அதன் உயர்தடுப்பு நிலையை உடைக்க முயற்சி செய்யும். அடுத்து ஒரே அளவான ஆதரவு நிலை இருக்கும். கடைசியாக மூன்றாவது ஏற்றத்தின் போது தடுப்பு நிலைக்கு மேலே சென்று இந்த அமைப்பை நிறைவு செய்யும். அதன் பிறகு பங்கின் விலை கீழ் மேலேறும் எனலாம். 


 




இந்த அமைப்பின் முதல் நிலையில், பங்கின் விலை புதிய குறைந்தபட்ச விலையை அடையும். அந்த நிலையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் போது, அதன் விலை உயரத் தொடங்கும். அப்போது அந்த விலையில் ஆதரவு நிலை உருவாகும். இந்த ஏற்றம் என்பது ஆதரவு நிலை வரை வந்து நின்றுவிடும். பிறகு பங்கை வாங்குபவர்களின் குறைய தொடங்கும் போது பங்கின் விலை இறங்கி ஆதரவு நிலையை அடையும். அந்நிலையில், மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்குவதால், விலை ஏறி தடுப்பு நிலைக்கு வரும். இது போன்ற ஏற்ற, இறக்கம் மூன்று முறை நடக்கும். இந்த நேரத்தில், வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதால் பங்கின் விலை உயர்தடுப்பு நிலையை உடைத்துக் கொண்டு மேலேற தொடங்கி விடும். 

இந்த அமைப்பையும் தொடக்கத்தில் அடையாளம் காண்பது கடினம். காரணம், இது முன் பகுதியில் விவரிக்கப்பட்ட டபுள் பாட்டம் அமைப்பு போல் கிட்டதட்ட இருக்கும். இந்நிலையில் ஒருவர், முக்கியமாக முந்தைய ஆதரவு நிலைக்கு செல்லும் வரை காத்திருந்து அதன் பிறகு வாங்க ஆரம்பிக்க வேண்டும். இங்கே பங்கு குறிப்பிட்ட காலத்துக்கு இரு குறிப்பிட்ட நிலைக்கு இடையே வர்த்தகமாகி கொண்டிருக்கும். 
 

இந்த டிரிபிள் பாட்டம் அமைப்பில், பங்கின் விலை ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலையை அடைய முயற்சிக்கும் போது, வர்த்தக அளவு அதிகரித்து விடும். அடுத்து மீண்டும் உயர்தடுப்பு நிலைக்கு மேலே பங்கின் விலை வரும் போது, வர்த்தக அளவு குறைந்து அதன் விலை குறையத் தொடங்கும்.    

ஒரு முறை சிக்னல் உருவான பிறகு, விலை வித்தியாசம் என்பது சார்ட் அமைப்பின் அளவு அல்லது தடுப்பு மற்றும் ஆதரவு நிலைக்கு இடைப்பட்ட வித்தியாசமாக இருக்கும். இது ‘பிரேக் அவுட்’ புள்ளியிலிருந்து கணக்கிடப்படும்.


 

No Comments