thumbnail

‘டெக்னிக்கல் அனாலிசஸ்’ ஒரு கலை


நூலாசிரியர் திரு. ஜி. ரமேஷ் முன்னுரை:

 ‘டெக்னிக்கல் அனாலிசஸ்’ ஒரு கலை

‘டெக்னிக்கல் அனாலிசஸ்’ என்பது ஒரு கலை. அது ஒரு அறிவியல் அல்ல. (Technical Analysis is an art; not science) என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, அறிவியலில் விதிமுறைகளின் படிதான் எல்லாம் நடக்கும் நடக்க வேண்டும். பங்குச் சந்தையில் விதிமுறைகளின் படிதான் விலை மாற்றம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங்களின் நடக்கும். ஆனால், எதிர்பாராத நிலையில் அது மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது நிலமையை நேர்த்தியாக சமாளிப்பது ஒரு கலை. அதனால்தான் டெக்னிக்கள் அனாலிசஸை ஒரு கலை என்று குறிப்பிட்டேன். இந்தக் கலை அனைவருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் கை வந்த கலையாக மாற வாய்ப்பு இருக்கிறது.

பழங்கால முதலீட்டு அளவு கோல்களான நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கைகள், நிதி நிலை முடிவுகளை ஒரு நிறுவனத்தைப் பற்றி அடிப்படையாக தெரிந்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் முதலீட்டு அல்லது வர்த்தக முடிவை எடுப்பதற்கு முன்புவரை மட்டுமே கவனிக்க வேண்டும். அதன் பிறகு பங்குச் சந்தைகளின் குறியீடுகளான சென்செக்ஸ் (மும்பை பங்குச் சந்தை), நிஃப்டி (தேசிய பங்குச் சந்தை) மற்றும் இந்தப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளின் விலை அடிப்படையை பின்பற்றி லாபம் பார்ப்பதுதான் டெக்னிக்கல் அனாலிஸின் அடிப்படை..!

‘டே டிரேடிங்’ என்கிற தின வர்த்தகத்தில் சுமார் 90 விழுக்காட்டின் லாபம் சம்பாதிப்பதில் மீட்டுவதில்லை. 10 விழுக்காட்டினர் நஷ்டம் அடையாதவர்களாக அல்லது லாபம் அடைபவர்களாக இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரங்கள்.

காரணம், தின வர்த்தகத்தில் ஈடுபடுவர்களின் ஒழுங்குமுறையற்ற வர்த்தகம்தான்.

வர்த்தகம் செய்வது எப்படி என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவான அணுகுமுறை இருப்பது அவசியம். வெறும் யூகத்தின் அடிப்படை அல்லது நண்பர், உறவினர் சொன்னார் என்பதற்காக வர்த்தகம் செய்வது நஷ்டத்தில் கொண்டு போய்விட்டு விடும்.

பங்குச் சந்தையில் குறியீடுகள் மற்றும் பங்குகளின் விலை போக்கை அறிந்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அதில் தப்பில்லை. ஆனால், அதை கொள்கை (தியரி) மற்றும் நடைமுறையில் தெளிவாக அறிந்துக் கொண்டு பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட டெக்னிக்கல் அனாலிசஸ் முறைகலை தொடர்ந்து பின்பற்றுவதுதான் லாபம் ஈட்டிவதற்கான மந்திரமாக இருக்கிறது.

அடுத்த மிக முக்கியமான விஷயம்..!

முதலீட்டாளர்களாகட்டும் வர்த்தகர்களாகட்டும் செய்யும் மகா தவறு..! அதீத லாப எதிர்பார்ப்பு. அதாவது,

ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துவிட்டு லட்ச ரூபாய் லாபம் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்க்கும் லாப விழுக்காடு நியாயமானதாக இருந்தால் நிச்சயம் லாபம் சம்பாதிக்க முடியும். அதற்கு மிக முக்கியமானது. பொறுமை..!

பொறுத்தார் பூமியாள்வார்கள் மட்டும் அல்ல, பங்குச் சந்தை வர்த்தகத்தையும் ஆள்வார்கள்.

பொறுமையுடன் இந்த நூலை கூர்ந்து படித்து சந்தையில் பணம் சம்பாதிக்க இனிய வாழ்த்துகள்..!

 என்றும் அன்புடன்

ஜி.ரமேஷ்

டெக்னிக்கல் அனாலிஸ்ட்

மெடாசிஸ் டெக்

தொடர்புக்கு:

கைபேசி: 98408 82215

மெயில்: info@todaytrading.com

இணையத்தளம்: ://www.todaytrading.com

No Comments