thumbnail

சொற்களஞ்சியம் - Glossary -2

Fundamental Analysis - அடிப்படை  ஆய்வு & முதலீடு செய்ய தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு எந்த அளவுக்கு எதிர்கால வளர்ச்சி இருக்கிறது என்பது போன்ற விசயங்களை அலசி ஆராய்வது.                                                                                                          
Gaps Pattern - இடைவெளிகள் அமைப்பு -& இரு அடுத்தடுத்த நாட்களில் பங்கின் முடிவு மற்றும் ஆரம்ப விலைகளுக்கு இடைப்பட்ட வித்தியாசம் இது.

Hammer Candle Stick Pattern -  சுத்தியல்  மெழுகுவர்த்தி குச்சி &  பங்கின் விலை இறங்கிக் கொண்டிருக்கும் போது கீழ் நிலையில் இந்த சுத்தியல்  மெழுகுவர்த்தி குச்சி அமைப்பு உருவாகும்.  

Head & Shoulder Pattern - ஹெட் அண்ட் ஹோல்டர் அமைப்பு -& பங்குச் சந்தையின் புள்ளி அல்லது பங்கின் விலை ஏறப் போகிறது அல்லது இறக்கப் போகிறது என்கிற இரு நிலைகளையும் சுட்டிக் காட்டும் ஒரு குறியீடு இது. 

High  Price - அதிகபட்ச விலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் உச்சபட்சவிலை’ இது.

Indicators -  இண்டிகேட்டர்கள் & பங்குச் சந்தை அல்லது பங்கின் விலை போக்கை அறிந்துக் கொள்ள உதவும் அமைப்பு இது. 

Intraday - இன்ட்ரா டே -& நாள் வர்த்தம் & பங்குகளை அன்றே வாங்கி அன்றே வாங்குதல். இதே போல் அன்றே விற்று அன்றே விற்பதையும் இது குறிக்கும். 

Line Charts - கோடு வடிவ வரைபடங்கள் & பங்கின் விலைகளை கோட்டின் மூலம் இணைத்தால் லைன் சார்ட் கிடைக்கும். 

Long  - வாங்குவது -& பங்குச் சந்தையை பொறுத்த வரையில் முதலீடு/வர்த்தகம் செய்ய ஒரு பங்கை வாங்குவது லாங்க்.

Low Price - குறைந்தபட்ச விலை & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் குறைந்த விலை இது.

Moving Average Convergence Divergence  - எம்.ஏ.சி.டி -& இந்த பகுப்பாய்வு மூலம் முதலீட்டாளர்கள், ஏற்கெனவே வாங்கி இருக்கும் பங்கை தொடர்ந்து வைத்திருக்கலமா? அல்லது விற்றுவிடலாமா? என்பதை அறிய முடியும்.
 
Morning Star Pattern - மார்னிங் ஸ்டார் அமைப்பு &  சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு மாறாக இறங்க போகிறது என்பதை சுட்டிக் காட்டும் அமைப்பு.

Moving average - மூவிங் சராசரி -& இண்டிகேட்டர்களில் முக்கியமானது. பங்கின் போக்கு தற்போது ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என அறிந்துக் கொள்ள உதவும். 

Negative Divergence  - நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் & விலை மேல் நோக்கி ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான அதிகபட்ச விலையிலேயே ஊசலாடிக் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இண்டிகேட்டர்கள் கீழே செல்வது. 

Open Interest  -  ஒப்பன் இன்ட்ரஸ்ட் -  இது ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நிலுவையிலுள்ள மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிகையை ‘ஓப்பன் இன்ட்ரஸ்ட்’  என்பார்கள்.

Open Price  -  தொடக்கவிலை  & ஒரு பங்கின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் தொடக்க விலை இது.
 
Partial Gap Down  - தொடக்க விலை, முன் தினத்தின் முடிவு விலையை விட குறைவாக இருப்பது. 

Partial Gap Up  - தொடக்க விலை, முன் தினத்தின் முடிவு விலையை விட அதிகமாக இருப்பது. 

Pennent Pattern - பென்னட் அமைப்பு & சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன்.

Piercing Pattern - பியர்சிங் பேட்டர்ன் & முதல் நாள் கரடி சந்தை மெழுகுவர்த்தி உருவாகி இருக்க வேண்டும். இரண்டாவது நாளில் அது காளை சந்தை மெழுகுவர்த்தி அமைப்பாக இருந்து முதல் நாளின் மத்தியில் காணப்பட்ட விலையை விட அதிகமாக முடிவு பெற வேண்டும்

Postive Divergence - பாசிடிவ் டைவர்ஜன்சஸ் & பங்கின் விலை கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ அல்லது சமமான குறைந்தபட்ச  விலையிலே ஊசலாடிக் கொண்டிருக்கும் போதோ இண்டிகேட்டர்கள் மேலே செல்வது. 

Pre opening session  - முன் சந்தை வர்த்தகம் &  தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி 15 நிமிடங்கள், 9.15 மணி வரை நடக்கும் வர்த்தகத்தை இது குறிக்கும். அப்போது  சும்மா விலை குறிப்பிட்டு வாங்கவோ விற்கவோ செய்வார்கள். ஆனால், இதை 9.15 மணிக்கு உறுதிப்படுத்தினால் மட்டும்தான் ஆர்டர் நிறைவேற்றப்படும்.

Profit Book  -  லாப அடைவது & ஒரு பங்கை விற்று லாபம் பெறுவதை இப்படி குறிப்பிடுவார்கள்.

Range Trading  - எல்லைக்குள் வர்த்தகமாவது &  பங்கின் விலை, ஒரு நிலைக்கு சென்று விட்டு மீண்டும் வெகு சீக்கிரத்திலே பழைய நிலைக்கே வந்துவிடுவது.

Resistance Level - உயர்தடுப்பு நிலை -  தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே செல்லும் ஒரு பங்கின் விலை ஒரு நிலையில் நின்று, மறுபடியும் கீழே இறங்க ஆரம்பிக்கும் நிலை. 

No Comments