thumbnail

பாலிங்கர் பான்ட்கள் - Bollinger Bands

27. பாலிங்கர் பான்ட்கள்

கடந்த 1980&ம் ஆண்டு வாக்கில் ஜான் பாலிங்கர் (John Bollinger)  என்பவர் உருவாக்கிய தொழில்நுட்ப வர்த்தக சாதனம்தான் பாலிங்கர் பான்ட்கள் (). அந்தக் கால கட்டத்தில் சந்தை அதிக ஊசலாட்டத்தில் இருந்ததால் இதன் தேவை ஏற்பட்டது.
அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச விலைக்கு இடையே தொடர்பு வரையறை ஏற்படுத்துவதே பாலிங்கர் பான்ட்களின் நோக்கமாக இருக்கிறது. 
வரையரைப்படி, அப்பர் பாண்டில் விலை அதிகமாகவும், லோயர் பாண்டில் விலை குறைவாகவும் இருக்கும். 

பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள் ஒரு பட்டைக்குள் வர்த்தகமாகி வரும் நிலையில் தொடர்ந்த ஒழுங்குமுறையான (சிஸ்டமேட்டிங்) வர்த்தகத்தை மேற்கொள்ள சுட்டிக் காட்டுகிறது, இந்த பாலிங்கர் பான்ட்கள்.

பாலிங்கர் பான்ட்கள் என்பது பங்கின் விலைகளுக்கு இடைப்பட்ட தொடர்பின் அடிப்படையில் மூன்று வளைவுகள் வரைவதாக இருக்கிறது.

மிடில் பான்ட் என்பது இடைப்பட்ட காலத்தில் பங்கின் டிரெண்ட்டை அளவிடுவதாக இருக்கிறது. இது பொதுவாக, சிம்பிள் மூவிங் ஆவரேஜ் ஆக இருக்கும். இது அப்பர் பான்ட் மற்றும் லோயர் பான்ட்க்கான அடிப்படையாக விளங்குகிறது.  அப்பர் பான்ட் மற்றும் லோயர் பான்ட் மற்றும்  மிடில் பான்ட் இடையேயான இடைவெளி சந்தையின் ஊசலாட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ஒரே புள்ளி விவரத்தின் ஸ்டாண்டர்ட் டிவியேஷன் சராசரியாக பயன்படுத்தப்படுகிறது. 20 நாட்கள் மற்றும் இரு ஸ்டாண்டர்ட் டிவியேஷன் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. 

ஸ்டாண்டர்ட் டிவியேஷன் பற்றிய சிறிய விளக்கத்தை தெரிந்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். 

ஸ்டாண்டர்ட் டிவியேஷன் என்பது ஒரு புள்ளி விவர சொல். இது வேறுபாட்டின் அளவை குறிப்பிடும்.
 ஸ்டாண்டர்ட் டிவியேஷன், சந்தையின் ஏற்ற இறக்கத்தை அளவீடு செய்வதாகும்.
பொதுவாக சொல்லப் போனால், உண்மையான மதிப்புக்கும் சராசரிக்கும் இடையிலான வித்தியாசம்தான் இது. 
அதிக ஏற்ற இறக்கம் என்றால் அதிக ஸ்டாண்டர்ட் டிவியேஷன் என்று பொருள்.. இதே போல் குறைவான ஏற்ற இறக்கம் என்றால் குறைவான ஸ்டாண்டர்ட் டிவியேஷன் என்று பொருள்.
எதிர்பார்க்கும் ரிஸ்க் அலவு மற்றும் விலை வேறுபாட்டை நிர்ணயிக்க இந்த ஸ்டாண்டர்ட் டிவியேஷன் பயன்படுகிறது. 


பான்ட் கணக்கீடு

 மிடில் பான்ட் = 20 நாட்களுக்கான சிம்பிள் மூவிங் ஆவரேஜ் (எஸ்.எம்.ஏ)
அப்பர் பான்ட் = 20 நாட்களுக்கான எஸ்.எம்.ஏ. + ( 20 நாட்களுக்கான ஸ்டாண்டர்ட் டிவியேஷன் விலை ஜ் 2)
லோயர் பான்ட் = 20 நாட்களுக்கான எஸ்.எம்.ஏ. & ( 20 நாட்களுக்கான ஸ்டாண்டர்ட் டிவியேஷன் விலை ஜ் 2)

****



No Comments