thumbnail

சொற்களஞ்சியம் - Glossary -3


RSI- Relative Strength Index  - ஆர்.எஸ்.ஐ. குறியீடு & பங்குச் சந்தை குறியீட்டு எண் அல்லது பங்கின் விலை அதன் போக்கை மாற்றப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை குறியீடுதான் ஆர்.எஸ்.ஐ. டைவர்ஜென்சஸ். 

Short - விற்பனை & ஒரு பங்கை விற்பனை செய்வது.  
                                                                                                         
Simple Moving Average - SMA  - எளிய மூவிங் சராசரி & குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கின் சராசரி விலையை கணக்கிடுவது மூலம் உருவாக்கப்படுகிறது. 

Spinning Tops Pattern  -  ஸ்பின்னிங் டாப்ஸ் &  சந்தை அல்லது பங்கின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் பக்கவாட்டு என்ற சைடு வேஸ் இயக்கத்தில் இருக்கும் போது, மெழுகுவர்த்தி குச்சி சார்ட், சிறிய ரியல் பாடிகளை கொண்டிருக்கும். அது காளை மற்றும் கரடி சந்தைக்கு இடைப்பட்ட சமநிலையில் இருக்கும். அப்போது மெழுகுவர்த்தி குச்சி வெள்ளை அல்லது கறுப்பாக இருக்கும். இதை ஸ்பின்னிங் டாப்ஸ் என்பார்கள்.  

Stop Loss  - இழப்பு தடுப்பு & பங்கு முதலீடு மூலமான நடடம் அல்லது லாபத்துக்கான ஓர் அளவை நிர்ணயித்துக் கொள்வது. 

Support Level - ஆதரவு நிலை & தொடர்ந்து இறங்கிக் கொண்டே வரும் பங்கின் விலை இறங்குவது நின்று, மீண்டும் மேலே செல்ல ஆரம்பிக்கும் இடம் ஆதரவு நிலை எனப்படுகிறது. 

Technical Analysis - தொழில்நுட்ப ஆய்வு & பங்கின் விலை நிலவரத்தை கொண்டு சார்ட்களின் உதவியுடன் அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுப்பது.                                                                                                           
Trend  - போக்கு நிலை & சந்தையின் புள்ளி அல்லது பங்கின் விலை எந்த திசையில் செல்கிறது என்பது போக்கு நிலை.  

Trend line angle  -  டிரெண்ட் லைன் ஆங்கிள்- & -சார்ட்டில் நாட்களை குறிக்கும் லைன் மற்றும் விலைகளை இணைக்கும் டிரெண்ட் லைன், இரண்டிற்கும் இடையே உள்ள சாய்வு.                                                                      
Triple Bottom Pattern -  டிரிபிள் பாட்டம் அமைப்பு & இது காளைச் சந்தைக்கான அறிகுறி. பங்கு ஒன்று அதன் ஒரே போன்ற ஆதரவு நிலையை மூன்றாவது தடவை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி செல்வது மூலம் இந்த அமைப்பு உருவாகும்.

Triple Top Pattern  - டிரிபிள் டாப் அமைப்பு & பங்கின் விலை, ஏறுமுத்தில் இருக்கும் போது இறங்கப் போகிறது ) என்பதை குறிக்கும் அமைப்பாக இருக்கிறது. 
 
Up Trend  -  ஏறும் போக்கு நிலை - & பங்கின் விலை ஏறிக் கொண்டிருப்பதை குறிக்கும் நிலை, ஏறும் போக்கு நிலைதான் பங்கை -வாங்குவதற்கான சரியான நேரமாக இருக்கும்.

Volume - வர்த்தக அளவு & குறிப்பிட்ட காலத்தில் வர்த்தகமான பங்குகளின் (அல்லது ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள்) எண்ணிகையை குறிப்பது வர்த்தக அளவு எனப்படுகிறது. 

Volume Pattern - வால்யூம் அமைப்பு & வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கையை குறிப்பிடும். இதன் அளவை வைத்து சந்தையின் போக்கை அறிந்துக் கொள்ள முடியும்.

Weighted Moving Average - WMA  -   இந்த மூவிங் ஆவரேஜ் சந்தையின் போக்கை கணிக்க உதவுகிறது. மேலும், ஆதரவு மற்றும் தடுப்பு நிலைகளை வரையறுக்க உதவுகின்றன.
 
White Candle Stick  - வெள்ளை மெழுகுவர்த்தி குச்சி  - பங்கின் முடிவு விலை, தொடக்க விலையை விட அதிகமாக இருந்தால் அது வெள்ளை மெழுகுவர்த்தி குச்சி

*** 

No Comments